Sunday, 26 March 2017

Jio-வை முந்தியது BSNL.! ரூ.339 திட்டம்.. ஒரு நாளைக்கு 2 ஜிபி, மாதத்திற்கு56 ஜிபி.!

ஜியோவின் அதிரடி சலுகையால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் போட்டியை சமாளித்து  சந்தித்து வருகின்றன. அதன்படி ஜியோவிற்கு எதிராக பல புது புது சலுகைகளை மற்ற தொலைத்தொடர்பு நிருவனங்கள் வழங்கி வருகின்றன. குறிப்பாக ஏர்டெல் நிறுவனம், ஜியோவிற்கு போட்டியாக, அதற்கு இணையான சலுகையை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், அடுத்தகட்டமாக  பொதுத்துறை நிறுவனமான , பிஎஸ்என்எல் நிறுவனம்,தங்கள்  வாடிக்கையாளர்களுக்கு சலுகையை வழங்குவதாக அதிகாரபூர்வமான அறிவிப்பை நேற்று வெளியிட்டது .
அதன்படி, ரூ.399 திட்டம்
28 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்படும் இந்த திட்டத்தில், ஒரு நாளைக்கு 2GB வீதம் மாதத்திற்கு 56 GB வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு நாளைக்கு 25 நிமிடங்கள் வரை, வரம்பற்ற அழைப்புகளை பேச முடியும் என்பது  குறிப்பிடத்தக்கது.
இந்த சிறப்ப்பு சலுகையானது , இம்மாத  இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப் படும்  என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின்  இந்த சலுகை, ஜியோவை விட இரண்டு மடங்கு அதிகம் என்பதால்,  வாடிக்கையாளர்கள்  பிஎஸ்எல்எல் பக்கம் திரும்புவார்களா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.! ☺

Thursday, 23 March 2017

மொபைல் பேட்டரி லைஃப் நல்லா இருக்கனும்னா இதைக் கவனிங்க.!

உலகம் நாளைக்கே அழியப்போகுதுன்னு சொன்னாலும், அதுவரைக்கும் மொபைல் பேட்டரி ஃபுல் சார்ஜ் இருக்குமான்னு கவலைப்பட்றவங்க தான் ஸ்மார்ட்போன் யூசர்ஸ். 'வெளியே கிளம்புவதற்கு பேட்டரி ஃபுல் என்பதைவிட வேறென்ன நல்ல சகுணம் இருந்துவிடப் போகிறது!' என்பது பிரபலமான ட்விட்டர் மொழி.

மொபைல் பேட்டரி நீடித்து உழைக்க கடைப்பிடிக்க வேண்டிய சில வழிகள்..

பேட்டரி பாவம்

'மொபைல் தானாக ஆஃப் ஆகும்வரை பயன்படுத்திவிட்டு, அதன்பின் ஃபுல் சார்ஜ் போடுங்க. அப்பதான் பேட்டரி லைஃப் நல்லாருக்கும்' எனப் புதிதாக மொபைல் வாங்கியதும் அனைவரும் இலவசமாக அறிவுரை தருவார்கள்.

இது சரியான முறை தானா எனக் கேட்டால், பேட்டரி முழுதாகத் தீரும்வரைப் பயன்படுத்துவது சரியல்ல என்கிறார்கள் வல்லுநர்கள். இப்படிச் செய்வது மொபைல் பேட்டரியின் வாழ்க்கையைக் குறைக்கும். மேலும் சார்ஜ் குறைவாக இருக்கும்பொழுது மொபைலைப் பயன்படுத்தினால், மொபைல் வெளிப்படுத்தும் கதிர்வீச்சின் அளவு அதிகமாக இருப்பதோடு, விரைவில் சூடாகிவிடும். எனவே பேட்டரி சார்ஜ் குறையும்போது உடனடியாக சார்ஜ் செய்துகொள்வது நல்லது.

இரவு நேரம் சார்ஜ் போடும்போது கவனம்

மொபைலை இடைவிடாது பயன்படுத்திவிட்டு இரவு முழுவதும் சார்ஜ் போடுவதை சிலர் வழக்கமாக வைத்திருப்பார்கள். முழுவதுமாக சார்ஜ் ஏறியதும், அதற்குமேல் சார்ஜ் ஏறாதவாறு மொபைல் தானாகவே நிறுத்திக்கொள்ளும். ஆனாலும் இரவில் மின் அழுத்தம் அதிகமாக இருக்கும் என்பதால், இரவு நேரம் சார்ஜ் போடுவதைத் தவிர்ப்பது நல்லது.

தரம் குறைந்த சார்ஜருக்கு 'நோ' சொல்லுங்கள்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் அனைத்துக்கும் USB டைப் சார்ஜர் தான் பயன்படுத்தப்படுகின்றன. எனவே சிலர் USB டைப் சார்ஜர் எது கிடைத்தாலும் மாற்றி மாற்றிப் பயன்படுத்துவர். 'எல்லாமே ஒன்னுதான பாஸ்' எனத் தோன்றினாலும், ஒவ்வொரு மொபைலுக்கும் சர்க்யூட் வேறு என்பதால் தங்கள் மொபைலுக்கென பிரத்யேகமாக வழங்கப்பட்ட சார்ஜர்களைப் பயன்படுத்துவது பேட்டரியை நீட்டிக்க வழிசெய்யும். அதுமட்டுமின்றி, விலை குறைவான தரம் குறைந்த சார்ஜர்களைப் பயன்படுத்தும்போது சார்ஜ் ஏறுவது தாமதமாவதோடு, பேட்டரியைப் பதம் பார்க்கவும் வாய்ப்பிருக்கிறது.

ரீபூட் அவசியம்

சிம், மெமரி கார்ட் போன்றவற்றை மாற்றும்பொழுதோ அல்லது மொபைல் ஸ்ட்ரக் ஆனபோது மட்டும்தான் நம்மில் பலரும் மொபைலை ஆஃப் செய்திருப்போம். 24 மணிநேரமும் இடைவிடாது மொபைலைப் பயன்படுத்தியே பழக்கப்பட்டுவிட்டோம். ஆனால் தினமும் ஒரு முறையாவது மொபைலை ரீபூட் செய்வது அவசியம் என்கிறார்கள் வல்லுநர்கள். குறைந்தபட்சம் வாரம் ஒரு முறையாவது மொபைலை ரீபூட் செய்வது பேட்டரியின் லைஃப்பை அதிகரிப்பதோடு, மொபைலின் செயல்திறன் அதிகரிக்கவும் உதவும்.

லொக்கேசன் சர்வீசஸ ஆஃப் பண்ண மறக்காதீங்க

கால் டாக்ஸி புக் செய்வதில் தொடங்கி, மேப்பில் ஓர் இடத்தைத் தேடுவது வரை ஜி.பி.எஸ் சேவை பலவிதமாகப் பயன்படுகிறது. ஆனால் லொக்கேசன் சர்வீஸை ஒருமுறைப் பயன்படுத்திவிட்டு அதை ஆஃப் செய்ய மறந்துவிடுவோம். இது பேட்டரியை அளவுக்கதிகமாகத் தின்று தீர்த்துவிடும். லொக்கேசன் சர்வீஸைப் பயன்படுத்தியவுடன் உடனடியாக அதை அணைக்க மறக்காதீர்கள்.

வைப்ரேஷன்

குறுஞ்செய்தி, அழைப்புகள், அறிவிப்புகள் என அனைத்துக்கும் வைப்ரேட் ஆப்ஷனை தேர்வு செய்யாதீர்கள். இது ஒலியை விடவும் அதிக சக்தியை இழுக்கும். தவிர்க்க முடியாத சூழல்களைத் தவிர்த்து, மற்ற நேரங்களில் வைப்ரேஷன் ஆப்ஷனை எடுத்துவிடுங்கள்.! ☺👍

Tuesday, 21 March 2017

ஆறுநாட்டு பயணிகள் இந்த பொருட்களை விமானத்தில் கொண்டு செல்ல தடை: பிரித்தானியா அதிரடி.!

ஆறு நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்களுடன் லேப்டாப் மற்றும் டேப்லட் போன்றவைகளை எடுத்துச் செல்ல பிரித்தானியா தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க அரசு அண்மையில் தீவிரவாதிகள் வானில் பறக்கும் விமானங்களை தாக்குவதற்கு சதித்திட்டம் தீட்டி வருவதாகவும், இதற்கு அவர்கள் கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் டேப்லட் போன்றவைகளை பயன்படுத்தப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்தது.
இதனால் அமெரிக்கா 8 நாட்டு விமான பயணிகள் தங்களுடன் மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்வதற்கு தடை விதித்தது.

தற்போது அதே விதிமுறையை பிரிட்டன் பயன்படுத்துவது போன்ற ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதில் துருக்கி, லிபேனான், ஜோர்டான், எகிப்து, டினுசியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமானிகள் தங்களுடன் விமானத்திற்குள் எடுத்துச் செல்லும் பைகளில் லேப்டாப் மற்றும் டேப்லட் போன்ற மின்னனு சாதனங்களை எடுத்துச் செல்வதற்கு தடை விதித்துள்ளது.

ஆனால் அவர்கள் இந்த மின்னனு சாதனங்களை தங்களுடைய லக்கேஜில் எடுத்துச் செல்லலாம் என்று தெரிவித்துள்ளது. காரணம் இந்த லக்கேஜ்கள் அனைத்தும் விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி வைப்பார்கள், அதனால் அதில் எந்த ஒரு வெடி பொருட்களோ அல்லது வேறு இருந்தால் உடனடியாக கண்டுபிடித்து விடலாம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் விமானங்களில் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளன.
டேப்லட், கம்யூட்டர் போன்ற சாதனங்களில் வெடிபொருட்களை எளிதில் மறைத்து வைத்து கொண்டு வந்து விடலாம். அதன் காரணமாகவே இந்த தடை உத்தரவு என்று தெரிவித்துள்ளனர்.

Monday, 20 March 2017

இன்று உலக மகிழ்ச்சி தினம். உலகின் மகிழ்ச்சியான நாடு எது என்று தெரியுமா.?

உலகின் மகிழ்ச்சியான நாடாக நார்வே தேர்வாகியுள்ளது. மார்ச் 20-ம் தேதியான இன்று உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது .

கடந்த 2016ம் ஆண்டு டென்மார்க் முதலிடத்தில் இருந்தது. இந்த ஆண்டு நார்வே முதலிடத்தை பெற்றுள்ளது.
'உலகின் மிகவும மகிழ்ச்சியான நாடுகள் 2017' பட்டியலில் நார்டிக் நாடுகளான நார்வே, டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து. ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளே முன்னணி இடத்தை பிடித்துள்ளன.

ஐ.நா.வின் ‘சஸ்டெய்னபிள் டெவலப்மென்ட் சொலூஷன்ஸ் நெட்வொர்க்’ அமைப்பு மகிழ்ச்சிகரமான உலக நாடுகள் பட்டியலை கடந்த 2012ம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. 2017ம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதற்காக 155 நாடுகளில் ஆய்வு செய்துள்ளது. அதன்படி ஒரு நாட்டின் தனிநபர் வருமானம், ஆரோக்கியம், ஆயுட்காலம், சமூக ஆதரவு, சுதந்திரம் போன்ற மகிழ்ச்சிக்கான விஷயங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதில் சஹாரா பாலைவனத்தை ஒட்டிய ஆப்ரிக்க நாடுகள், சிரியா மற்றும் யேமன் உள்ளிட்ட குறைவான மகிழ்ச்சியுடைய நாடுகளாக பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

உலகின் மகிழ்ச்சியான 10 நாடுகள் பின்வருமாறு:

நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, பின்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து. ஆஸ்திரேலியா மற்றும் ஸ்வீடன் ஆகியவை ஆகும்.

தெற்கு சூடான், லைபீரியா, கொய்னா, டோகோ, ருவாண்டா, தான்சானியா, ப்ருண்டி மற்றும் மத்திய ஆப்பிரக்கன் குடியரசு உள்ளிட்டவை கடைசி 8 இடங்களில் உள்ள நாடுகளாகும்.

ஜெர்மனி 16வது இடத்திலும், பிரிட்டன் 19 வது இடத்திலும், பிரான்ஸ் 31வது இடத்திலும், அமெரிக்கா 14வது இடத்திலும் உள்ளது.

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கி 122வது இடத்தில் உள்ளது. ஆனால் இலங்கை(120), வங்கதேசம்(110), எத்தியோப்பியா (119), மியான்மர் (114), ஈராக் (117), ஈரான் ( 108), சோமாலியா(93) பாகிஸ்தான்(80) சீனா(79) ஆகியவை முன்னேறிய இடத்தில் உள்ளன.

பாரபட்சம் அதிகம் இல்லாத இல்லாத நாடுகளில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். அங்கு சமத்துவம் அதிகமாக உள்ளதுதான் அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம் என்று ஐநா கூறியுள்ளது. அதேபோல. பாரபட்சம் உள்ள சமுதாயத்தில் மக்கள் மகிழ்ச்சியாக வாழவில்லை என்றும் தனது குறிப்பில் ஐநா குறிப்பிட்டுள்ளது.!

Thursday, 16 March 2017

6 புதிய வாட்ஸ்ஆப் அம்சங்கள் : உங்களுக்கு எதெல்லாம் தெரியும்.?

நம்மில் பெரும்பாலானோர்கள் வாட்ஸ்ஆப்பை உரையாடல்கள் மற்றும் ஊடக பகிர்விற்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். ஆனால் வாட்ஸ்ஆப் தன்னுள் இன்னும் நிறைய அம்சங்களை கொண்டுள்ளது. அவைகள் என்னென்னவென்று அறிய வேண்டுமா.? இதோ வாட்ஸ்ஆப் கொண்டுள்ள 6 புதிய அம்சங்கள் பற்றிய தொகுப்பு உங்களுக்காக.!

கால் பேக்

பெரும்பாலும் நாம் வாட்ஸ்ஆப் அழைப்புகளை தவற விடுகின்றோம் அதற்காக வெளியான அம்சம் தான் கால் பேக் அம்சம். வி2.16.189, வாட்ஸ்ஆப்பில் ஒரு 'கால் பேக்' என்ற விருப்பம் ஒரு அழைப்பு தவற விடப்பட்ட பின்னர் திரையில் தோன்றும்.

அனிமேஷன் கிப்

நண்பர்களுடன் படங்களை பகிர்வது வேடிக்கையான விடயமாகும் அதுவே அனிமேஷன் கிப் (GIF) என்றால் இன்னும் அதிக வேடிக்கையாக இருக்கும். அதை நிகழ்த்த நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் ஸ்மார்ட்போனில் சேமிக்கப்படும் ஒரு கிப் (GIF) பைல்களை தேர்வு செய்து யாருக்கு அல்லது எந்த க்ரூப்பிற்கு அனுப்ப விரும்புகிறீர்கள் அதை தேர்வு செய்ய வேண்டியது தான்.

கிப் தேடல் ஆதரவு

வாட்ஸ்ஆப்பில் நீங்கள் கிப் பைல்களை ஷேர் மட்டுமல்ல நீங்கள் நேரடியாக அவைகளை கண்டுபிடிக்கவும் முடியும். வாட்ஸ்ஆப்பின் சமீபத்திய ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் கிப் தேடல் ஆதரவு தொடங்கப்பட்டுள்ளது. மேம்படுத்தல் பிறகு, பயனர்கள் பயன்பாட்டின் உள்ளேயே பல வகையான கிப்களை தேடலாம்.

பெர்சனலைஸ்

வாட்ஸ்ஆப்பில் உள்ள கேமரா கொண்டு எடுக்கும் புகைப்படங்களில் நீங்கள் எமோஜிக்கள் போன்றவைகளை இணைத்து அதிக அளவிலான பெர்சனலைஸ் செய்து கொள்ளலாம், அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வாட்ஸ்ஆப்பின் பில்ட் இந்த கேமரா கொண்டு புகைப்படம் எடுக்க வேண்டியது மட்டும் தான்.

சென்ட்

ஆப்பிள் ஐபோன் பயனர்கள் இப்போது மோசமான அல்லது இணைய இணைப்பு இல்லாத பகுதிகளில் கூட மெசேஜ்களை சென்ட் செய்ய முடியும். இதை 'சென்ட்' என்றே அழைக்கப்படுகிறது.

ஊடக கோப்பு

சமீபத்திய அப்டேட்டின்படி ஒரே நேரத்தில் மற்ற பயனர்களுடன் அதிகபட்சமாக 30 ஊடக கோப்புகளை ஷேர் செய்து கொள்ள முடியும் முன்பு ஒரு நேரத்தில் பகிரக்கூடிய ஊடக கோப்புகள் அதிகப்படியாக 10 இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.!

~நன்றி.!

Wednesday, 15 March 2017

ஜியோ ப்ரைம் (Jio Prime) கட்டண திட்டங்கள்.!


ரிலையன்ஸ் ஜியோ வழங்கிய இலவச சேவைகள் இம்மாத இறுதியோடு (மார்ச் 31) முடிவடைகிறது. அதற்கு பின்னர் ஜியோ ப்ரைம் சேவையின் கீழ் சந்தாதாரர்கள் ஜியோவின் சேவைகளை கட்டண திட்டங்களின் கீழ் பெறலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. முதலில் ரூ.99 என்ற ஆண்டு சந்தா மூலம் வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப் பெற வேண்டும்.

ஒருவேளை மார்ச் 31-ஆம் தேதிக்குள் ஒரு ஜியோ ப்ரைம் மெம்பராக மாறவில்லை எனில் உங்களுக்கு ஜியோ சேவை துண்டிக்கப்படும் எனவும், நீங்கள் எந்த திட்டத்தையும் ரீசார்ஜ் செய்ய முடியாது எனவும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உள்வரும் குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சேவை மட்டுமே பெற முடியும் என்றும் ரிலையன்ஸ் அதன் வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.

கட்டண திட்டங்கள்

ரூ.19 ரீசார்ஜ்

இங்கே பின்வரும் திட்டங்கள் ப்ரீபெய்ட் பயனர்களுக்கானது : ரூ.19 (1-நாள் செல்லுபடியாகும்): இதன் கீழ் ப்ரைம் பயனர்கள் வரம்பற்ற எஸ்எம்எஸ் மற்றும் 200 எம்பி 4ஜி தரவு பெறலாம். ப்ரைம் மெம்பராக அல்லாத பயனருக்கு 4ஜி தரவு மட்டும் 100 எம்பி ஆக குறைக்கப்படும்.

ரூ. 49 ரீசார்ஜ்

ரூ. 49 (3-நாள் செல்லுபடியாகும்): ப்ரைம் பயனர்களுக்கு வரம்பற்ற எஸ்எம்எஸ், 600 எம்பி 4ஜி தரவு, ப்ரைம் மெம்பர் அல்லாத பயனர்களுக்கு தரவு 300 எம்பியாக குறைக்கப்படும்.

ரூ.96 ரீசார்ஜ்

ரூ.96 (7-நாள் செல்லுபடியாகும்): ப்ரைம் பயனர்கள் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி என்ற பயன்பாட்டு கொள்கையின் கீழ் இலவச எஸ்எம்எஸ்களுடன் 7 ஜிபி அளவிலான 4ஜி தரவும், ப்ரைம் மெம்பர் அல்லாதவர்கள் 0.6 ஜிபி என்ற பயன்பாட்டு கொள்கையின் கீழ் திட்ட நன்மைகளை அனுபவிக்கலாம்.

ரூ.149 ரீசார்ஜ்

ரூ.149 (28 நாள் செல்லுபடியாகும்): ப்ரைம் பயனர்களுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 2 ஜிபி அளவிலான 4ஜி தரவு, ப்ரைம் அல்லாதவர்களுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 1 ஜிபி அளவிலான 4ஜி தரவு.

ரூ.303 ரீசார்ஜ்

ரூ.303 (28 நாள் செல்லுபடியாகும்): ப்ரைம் பயனர்களுக்கு நாள் ஒன்றிற்கு 1 ஜிபி என்ற பயன்பாடு கொள்கையின் கீழான 28 ஜிபி அளவிலான தரவு, வரம்பற்ற எஸ்எம்எஸ், ப்ரைம் அல்லாத பயனர்களுக்கு தரவு 2.5 ஜிபியாக குறைக்கப்படும்.

ரூ.499 ரீசார்ஜ்

ரூ.499 (28 நாள் செல்லுபடியாகும்): ப்ரைம் பயனர்களுக்கு நாள் ஒன்றிற்கு 1 ஜிபி என்ற பயன்பாடு கொள்கையின் கீழான 56 ஜிபி அளவிலான தரவு, வரம்பற்ற எஸ்எம்எஸ், ப்ரைம் அல்லாத பயனர்களுக்கு தரவு 5 ஜிபியாக குறைக்கப்படும்.

ரூ.999 ரீசார்ஜ்

ரூ.999 (60 நாட்கள்) ப்ரைம் பயனர்களுக்கு 60 ஜிபி அளவிலான 4ஜி தரவும், இலவச எஸ்எம்எஸ், ப்ரைம் அல்லாத பயனர்களுக்கு இந்த திட்டம் 30 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும் உடன் டேட்டா 12.5 ஜிபியாக குறைக்கப்படும்.

ரூ.1,999 ரீசார்ஜ்

ரூ.1,999 (90 நாட்கள்) ப்ரைம் பயனர்களுக்கு 125 ஜிபி அளவிலான 4ஜி தரவும், இலவச எஸ்எம்எஸ், ப்ரைம் அல்லாத பயனர்களுக்கு இந்த திட்டம் 30 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும் உடன் டேட்டா 30 ஜிபியாக குறைக்கப்படும்.

ரூ.4,999 ரீசார்ஜ்

ரூ.4,999 (180 நாட்கள்) ப்ரைம் பயனர்களுக்கு 350 ஜிபி அளவிலான 4ஜி தரவும், இலவச எஸ்எம்எஸ், ப்ரைம் அல்லாத பயனர்களுக்கு இந்த திட்டம் 30 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும் உடன் டேட்டா 100 ஜிபியாக குறைக்கப்படும்.

ரூ.9,999 ரீசார்ஜ்

ரூ.9,999 (360 நாட்கள்) ப்ரைம் பயனர்களுக்கு 750 ஜிபி அளவிலான 4ஜி தரவும், இலவச எஸ்எம்எஸ், ப்ரைம் அல்லாத பயனர்களுக்கு இந்த திட்டம் 30 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும் உடன் டேட்டா 200 ஜிபியாக குறைக்கப்படும்.

பூஸ்டர் பேக்ஸ்

பூஸ்டர் திட்டங்களை பொறுத்தமட்டில் ரூ.11 க்கு 0.1 ஜிபி, ரூ.51 க்கு 1 ஜிபி, ரூ.91 க்கு 2 ஜிபி, ரூ.201 க்கு 5 ஜிபி மற்றும் ரூ.301 க்கு 10 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா பெறலாம். இந்த திட்டங்கள் சர்வதேச அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் (குறிப்பிட்ட வரம்பை தாண்டி) ஆகிய நன்மைகளையும் உங்கள் முதன்மை கணக்கில் வழங்கும்.

ஜியோ சிம் வேலை சரியாக செய்யவில்லையா.? என்ன செய்யவேண்டும்.!


✆ இன்று வெகு வாடிக்கையாளர்களை தன்வசம் வைத்திருப்பது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆகும். திரைப்படங்களில் வரும் பஞ்ச் டைலாக் போல '4ஜி டா" என்று வெளியே சொல்லிக்கொண்டு திரிந்தாலும் உள்ளுக்குள் நமக்கு மட்டும் தான் தெரியும் இந்த ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் செய்யும் 'மக்கர்" வேலைகள், என்ன என்னவென்று.!

✆ வெறும் 150 எம்பியை வைத்துக்கொண்டு மாதம் முழுக்க இண்டர்நெட் சேவையை பயன்படுத்திய நம்மில் பெரும்பாலோனோர்கள் இப்போது 4ஜி வேகத்தை அனுபவிக்க முக்கியமான காரணமாக ரிலையன்ஸ் ஜியோ மீதுள்ள நன்றி காரணமாகவும் அல்லது வேறு நிறுவனத்தின் 4ஜி சிம் வாங்கி பணத்தை வீணடிக்க விரும்பாமலும் - என்ற நிலைபாட்டிற்குள் இருக்கும் நாம், ஜியோ 4ஜி சேவையை தொடர்ந்து அனுபவிப்பது நல்ல யோசனைதான். ஆனால் அதற்கு 4ஜி சிம் ஒத்துழைக்க வேண்டுமே.!

✆ ஒருவேளை உங்களின் 4ஜி போனில் ஜியோ சிம் வேலை செய்யவில்லையா.? கவலை வேண்டாம் ஜியோ சிம் வேலை செய்ய வைக்க சில எளிமையான வழிமுறைகள் இருக்கின்றது.

முதலில் உங்களது ஜியோ சிம் கார்டு 4ஜி சப்போர்ட் செய்யும் ஸ்லாட்டில் தான் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள். சில கருவிகளில் ஒரு ஸ்லாட் மட்டுமே 4ஜி சப்போர்ட் செய்யும். 4ஜி சப்போர்ட் செய்யாத ஸ்லாட்டில் சிம் இருந்தால் அது வேலை செய்யாது.

✆ 4ஜி சப்போர்ட் கொண்ட ஸ்லாட்டில் ஜியோ சிம் பொருத்தியதும் கருவியினை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். மீண்டும் ஒரு முறை சிம் கார்டினை கழற்றி மீண்டும் பொருத்த வேண்டும். இவ்வாறு செய்த பிறகு ஜியோ சிம் வேலை செய்யும். இப்பவும் வேலை செய்யாவிட்டால் உங்களது கருவியில் ஜியோ சிம் ஆனது வேலை செய்யாது.

✆ டூயல் சிம் கொண்ட கருவியில் பிரைமரி ஸ்லாட்டில் ஜியோ சிம் கார்டினை பொருத்துங்கள். பின் குறிப்பிட்ட சிம் கார்டின் டேட்டா ஆன் செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரி பாருங்கள். இதற்கு நோட்டிபிகேஷன் பேனலில் மொபைல் டேட்டா சென்று ஆன் செய்ய வேண்டும்.

✆ இனி மொபைல் போனின் நெட்வொர்க் செட்டிங்ஸ் சென்று பிரைமரி சிம் கார்டின் அனைத்து செட்டிங்ஸ்களும் சரியாக இருக்கின்றதா எனச் சரி பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் மொபைல் டேட்டா பயன்படுத்த பிரைமரி சிம் தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள்.

✆ பின் மொபைல் போனில் எல்டிஇ நெட்வொர்க் தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். இதைச் செயல்படுத்த செட்டிங்ஸ் - மொபைல் நெட்வொர்க்ஸ் - பிரெஃபர்டு நெட்வர்க் டைப் ஆப்ஷன் தேர்வு செய்ய வேண்டும்.

✆ தேவையென்றால் ஏபிஎன் மூலம் இண்டர்நெட் செட்டப் செய்ய வேண்டும். இதற்கு உங்களது கருவியில் ஜியோ சிம் சிக்னல் இருக்க வேண்டும். இதைச் செயல்படுத்த செட்டிங்ஸ் - மொபைல் நெட்வர்க்ஸ் - அக்செஸ் பாயின்ட் நேம்ஸ் செல்ல வேண்டும்.

✆ இனி நெட்வொர்க் ஆப்பரேட்டர் ஆப்ஷன்களை மேனுவலாக தேர்வு செய்ய வேண்டும். இதற்கு செட்டிங்ஸ் - மொபைல் நெட்வொர்க்ஸ் - நெட்வொர்க் ஆப்பரேட்டர் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

✆ இனியும் ஜியோ சிம் வேலை செய்யவில்லை எனில் உங்களது மொபைல் போனின் மென்பொருள் அல்லது வன்பொருள் கோளாறு ஏற்பட்டிருக்கலாம். ஒரு வேலை சிம் கார்டு வேலை செய்து அழைப்புகளை மேற்கொள்ள முடியவில்லை என்றால் இதனை முயற்சிக்கலாம்.

✆ கூகுள் பிளே ஸ்டோர் சென்று ஜியோ ஜாயின் ஆப் டவுன்லோடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் பெரும்பாலும் ஜியோ சிம் வேலை செய்யும். எனினும் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்ட கருவிகளில் ஜியோ வேலை செய்யாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆப்பிளும் நான்தான்... ஆண்ட்ராய்டும் நான்தான்... மொபைல் உலகில் ஒரு ‘சிவாஜி’.!

பத்திரிகைகாரரான எனக்கு ஆண்ட்ராய்டு மொபைல் அவசியம். ஆப்பிளில் கால் ரெக்கார்டு செய்ய முடியாது. ப்ளூடூத்தில் பாடல்களை அனுப்ப முடியாது, பிடித்த ரிங்டோனை நினைத்த மாத்திரத்தில் டவுன்லோடு செய்து வைக்க முடியாது என ஐஃபோனை நிராகரிக்க சில காரணங்களை சொல்லலாம். ஆனால், இவற்றையெல்லாம் மீறி ஐஃபோன் வைத்திருக்க வேண்டியதன் அவசியம் ஆப்பிள் யூஸர்களால் மட்டுமே புரிந்துக்கொள்ள முடியும்.

அதனாலே, பெரும்பாலான ஆப்பிள் யூஸர்ஸ் இரண்டு மொபைல்களுடன் அலைவர். ஓர் ஐஃபோன். ஓர் ஆண்ட்ராய்டு. இந்த சிக்கலுக்கு ஒரு தீர்வை கொண்டு வந்திருக்கிறது ”ஐ”.
உண்மையிலே ”ஐ” முழுமையான தீர்வுதானா என்கிற ரிவ்யூவை பிறகு அலசுவோம். முதலில், இது என்ன விஷயம் என்பதை பார்த்து விடுவோம்.

இது ஐஃபோனுக்கு ஒரு பேக் கேஸ்(Back case) போலதான். ஆனால், பின்னால் இருப்பது ஒரு ஆண்ட்ராய்டு மொபைல். சர்ப்ரைஸ் தானே?
‘ஐ’ கிட்டத்தட்ட ஒரு மொபைல் போல செயல்படுகிறது. ஆப்பிளின் ஸ்பீக்கர், மைக்ரோபோன், கேமரா போன்ற காஸ்ட்லி விஷயங்களை ஆப்பிள் ஃபோனில் இருப்பதையே இதுவும் பயன்படுத்துகிறது. மற்ற விஷயங்களுக்கு எல்லாம் தன்னகத்தே தனி ஹார்டுவேர் வைத்திருக்கிறது ஐ. இந்தப் பக்கம் பார்த்தால் ஆப்பிள் ஐஃபோன். திருப்பி பார்த்தால் ஆண்ட்ராய்டு. வாவ்!

இதில் இரண்டு சிம் கார்டுகள் போட்டுக்கொள்ள வசதி உண்டு. ஹெச்.டி படங்களாக சேமித்து வைக்க மெமரி கார்டு ஸ்லாட் உண்டு. இதற்கு தனியே பேட்டரி உண்டு. எனவே ஆப்பிளிடம் இருந்து கரண்ட்டை கடன் வாங்காது “ஐ”. 5இன்ச் ஸ்க்ரீனும் தனி. சுவாரஸ்யம்தான்.

புராசஸர் இன்னபிற விஷயங்கள், ஒரு நல்ல ஆண்ட்ராய்டு மொபைலுக்கு இணையாக இருக்கும் வாய்ப்புகள் குறைவுதான். ஆனால், இது செகண்ட்ரி மொபைல் என்னும்போது அது ஒரு பெரிய விஷயமாக இருக்காது.
ஆப்பிள் பேக் கேஸ் தானே ஐ? பிறகு இரண்டு பக்கமும் ஸ்க்ரீன் என்றால் மொபைல் பாதுகாப்பாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. அது பற்றி இதன் நிறுவனர்கள் எதுவும் சொல்லவில்லை.

மொபைல் உலகில் முன்னணியில் இருக்கும் இரண்டு ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஆப்பிளும், ஆண்ட்ராய்டும்தான். இரண்டையும் ஒரே கருவியில் கொண்டு வர முடியும் என்ற ஐடியாவே சுவாரஸ்யமானது. அதை சாத்தியப்படுத்த ஐ சொல்லும் வாய்ப்புகள் எல்லாமே எளிமையானவை. மேலும், இரண்டு கேமரா, இரண்டு மைக் என தேவையற்ற செலவுகளையும் இது குறைக்கிறது. அதே சமயம் பேட்டரி போன்ற முக்கியமான விஷயங்களை தனித்தனியே கொண்டிருப்பது நல்லது. ஸ்க்ரீனும் வேறு வேறு என்பதால், இரண்டு மொபைல்களும் தரும் அனுபவம் முற்றிலும் வேறு வேறாக இருக்கும்.

இப்போது புரொட்டோ டைப் மாடலை தயார் செய்திருக்கிறார்கள். மார்க்கெட்டுக்கு வரும்வரை காத்திருப்போம். அதற்குள் இந்த டிசைன் இன்னும் அழகாகலாம். கூடுதலாக சில விஷயங்கள் சேர்க்கப்படலாம்.சார்ஜ் குறைந்து போனால் இரண்டு மொபைலும் ஒன்றுக்கொன்று கரண்ட்டை கடன் தரும் வசதி கூட வரலாம்.
எப்படி இருந்தாலும் இது போன்ற புது முயற்சிகள் வெற்றியடைய வேண்டும். டெக்னாலஜியின் அடிப்படை எளிமையும், சிக்கனமுமாகத்தான் இருக்க வேண்டும். “ஐ” அப்படியொரு டெக்னாலஜியாக வர வாழ்த்துவோம்.