Tuesday, 7 March 2017

Steps to Increase Computer Speed and Performance

மிக மெதுவாக இயங்கும் கணினியின் வேகத்தை அதிகரிப்பது எப்படி.?


உங்கள் கணினி இயல்பு நிலையில் இல்லாமல் மெதுவாக செயல்படுகிறதெனில் அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்ற அலசல், அதனை சரி செய்வதற்கான வழிகளையும் தான் பின்வரும் பதிவுகளில் காணப் போகின்றோம்.

மனிதனால் செய்ய இயலாதவற்றையும் இதன் துணைக்கொண்டு விரைவாக செய்து முடித்துவிடலாம். அத்தகைய, கணினியானது இயல்பாக இயங்கிடாமல் பொறுமையாக செயல்படுகிறதா அதற்கான காரணங்களும் சரி செய்வதற்கான வழிகளும் கீழே...

1. டாஸ்க் மேனேஜர் (Task Manager)


உங்கள் கணினியின் பொறுமையான செயல்பாட்டிற்கான காரணத்தினைக் கண்டறிய டாஸ்க்மேனேஜர், MacBook எனில் ஆக்ட்டிவிட்டி மேனேஜர் (Activity Manager) என்கிற பகுதிக்குள் சென்று உங்கள் கணினியின் விண்டோஸ் பதிப்பு, ரேம், ஸ்பேஸ் ஆகியவற்றினை சரிபாருங்கள்.அவற்றில் ஏதேனும் தவறு நேர்ந்திருப்பின் அல்லது நீங்கள் விண்டோஸ் பழைய பதிப்பினை பயன்படுத்திக்கொண்டிருந்தாலோ அதனை அன்இன்ஸ்டால் செய்துவிட்டு புதிய விண்டோஸ் பதிப்பினை இன்ஸ்டால் செய்துகொண்டு துவக்குவதன் மூலம் கணினி விரைவாக செயல்படத் துவங்கும்.
 

2. தேவையில்லாத மென்பொருட்கள் (Unwanted Programs)

தனியான சில மேன்போருட்களாலும் கணினியானது இவ்வாறு பொறுமையாக செயல்படும் (உதாரணமாக Blue Stacks, High End Games). அதனால் எந்த மென்பொருள் இதற்கான காரணம் எனக்கண்டறிந்து அதனை நீக்கிவிட்டு (Uninstall) பயன்படுத்திப் பார்க்கலாம்.




3. ஹார்டு டிரைவ் (Hard Disk)

கணினியின் துரிதமான மற்றும் சிறப்பான செயல்பாட்டிற்கு முக்கிய காரணமே கணினியின் ஹார்டு டிரைவ் பாகமாகும். இதனால் கணினியில் அதிகப்படியான தரவுகள் (Files) இருக்குமேயானால் அதனை வேறு மெமரி கருவிகளுக்கு ஷிப்ட் செய்துகொள்ளுங்கள். அப்படியில்லையெனில் டிஸ்க் கிளீன்அப் (Disk Cleanup) என்கிற ஆப்ஷனில் சென்று க்ளீன் செய்வதன் மூலமும் கணினி விரைவாக செயல்படாத துவங்கும். முடிந்த அளவுக்கு ஹார்ட் டிஸ்க்-இல் 25% பகுதி காலியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.



4. மால்வேர்ஸ் (Malware /Anti Virus)

மேற்கூறிய வழிகள் இதன்மூலமாகவும் உங்கள் கணினியின் மந்தச் செயல்பாட்டிற்க்கான காரணத்தினைக் கண்டறிய இயலவில்லையெனில்.வைரஸ்களைக் கண்டறியும் ஆன்டிவைரஸ் மென்பொருள் கொண்டு கணினியில் மால்வேர்ஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறியுங்கள்.
 


5. மூன்றாம் தரப்பு மென்பொருட்கள் (Third-Party Softwares)

மேற்கூறியவாறு உங்களது கணினியில் வைரஸ் உள்ளிட்டவற்றின் பாதிப்பு ஏதேனும் இருக்குமெனில் அதனைச் சரி செய்திட சிகிளீனர் (CCleaner) உள்ளிட்ட மூன்றாம் தரப்பு மென்பொருட்களை உங்கள்நி கணினியில் நிறுவி சரிசெய்யலாம்.


To download CCleaner for Free, http://www.filehorse.com/download-ccleaner/

மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் கணினியை வேகமாகச்  செயல்படவைக்கலாம்.!

~ நன்றி.!

No comments:

Post a Comment