ஆறு நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்களுடன் லேப்டாப் மற்றும் டேப்லட் போன்றவைகளை எடுத்துச் செல்ல பிரித்தானியா தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அரசு அண்மையில் தீவிரவாதிகள் வானில் பறக்கும் விமானங்களை தாக்குவதற்கு சதித்திட்டம் தீட்டி வருவதாகவும், இதற்கு அவர்கள் கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் டேப்லட் போன்றவைகளை பயன்படுத்தப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்தது.
இதனால் அமெரிக்கா 8 நாட்டு விமான பயணிகள் தங்களுடன் மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்வதற்கு தடை விதித்தது.
தற்போது அதே விதிமுறையை பிரிட்டன் பயன்படுத்துவது போன்ற ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதில் துருக்கி, லிபேனான், ஜோர்டான், எகிப்து, டினுசியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமானிகள் தங்களுடன் விமானத்திற்குள் எடுத்துச் செல்லும் பைகளில் லேப்டாப் மற்றும் டேப்லட் போன்ற மின்னனு சாதனங்களை எடுத்துச் செல்வதற்கு தடை விதித்துள்ளது.
ஆனால் அவர்கள் இந்த மின்னனு சாதனங்களை தங்களுடைய லக்கேஜில் எடுத்துச் செல்லலாம் என்று தெரிவித்துள்ளது. காரணம் இந்த லக்கேஜ்கள் அனைத்தும் விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி வைப்பார்கள், அதனால் அதில் எந்த ஒரு வெடி பொருட்களோ அல்லது வேறு இருந்தால் உடனடியாக கண்டுபிடித்து விடலாம் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் விமானங்களில் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளன.
டேப்லட், கம்யூட்டர் போன்ற சாதனங்களில் வெடிபொருட்களை எளிதில் மறைத்து வைத்து கொண்டு வந்து விடலாம். அதன் காரணமாகவே இந்த தடை உத்தரவு என்று தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment