✆ இன்று வெகு வாடிக்கையாளர்களை தன்வசம் வைத்திருப்பது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆகும். திரைப்படங்களில் வரும் பஞ்ச் டைலாக் போல '4ஜி டா" என்று வெளியே சொல்லிக்கொண்டு திரிந்தாலும் உள்ளுக்குள் நமக்கு மட்டும் தான் தெரியும் இந்த ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் செய்யும் 'மக்கர்" வேலைகள், என்ன என்னவென்று.!
✆ வெறும் 150 எம்பியை வைத்துக்கொண்டு மாதம் முழுக்க இண்டர்நெட் சேவையை பயன்படுத்திய நம்மில் பெரும்பாலோனோர்கள் இப்போது 4ஜி வேகத்தை அனுபவிக்க முக்கியமான காரணமாக ரிலையன்ஸ் ஜியோ மீதுள்ள நன்றி காரணமாகவும் அல்லது வேறு நிறுவனத்தின் 4ஜி சிம் வாங்கி பணத்தை வீணடிக்க விரும்பாமலும் - என்ற நிலைபாட்டிற்குள் இருக்கும் நாம், ஜியோ 4ஜி சேவையை தொடர்ந்து அனுபவிப்பது நல்ல யோசனைதான். ஆனால் அதற்கு 4ஜி சிம் ஒத்துழைக்க வேண்டுமே.!
✆ ஒருவேளை உங்களின் 4ஜி போனில் ஜியோ சிம் வேலை செய்யவில்லையா.? கவலை வேண்டாம் ஜியோ சிம் வேலை செய்ய வைக்க சில எளிமையான வழிமுறைகள் இருக்கின்றது.
முதலில் உங்களது ஜியோ சிம் கார்டு 4ஜி சப்போர்ட் செய்யும் ஸ்லாட்டில் தான் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள். சில கருவிகளில் ஒரு ஸ்லாட் மட்டுமே 4ஜி சப்போர்ட் செய்யும். 4ஜி சப்போர்ட் செய்யாத ஸ்லாட்டில் சிம் இருந்தால் அது வேலை செய்யாது.
✆ 4ஜி சப்போர்ட் கொண்ட ஸ்லாட்டில் ஜியோ சிம் பொருத்தியதும் கருவியினை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். மீண்டும் ஒரு முறை சிம் கார்டினை கழற்றி மீண்டும் பொருத்த வேண்டும். இவ்வாறு செய்த பிறகு ஜியோ சிம் வேலை செய்யும். இப்பவும் வேலை செய்யாவிட்டால் உங்களது கருவியில் ஜியோ சிம் ஆனது வேலை செய்யாது.
✆ டூயல் சிம் கொண்ட கருவியில் பிரைமரி ஸ்லாட்டில் ஜியோ சிம் கார்டினை பொருத்துங்கள். பின் குறிப்பிட்ட சிம் கார்டின் டேட்டா ஆன் செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரி பாருங்கள். இதற்கு நோட்டிபிகேஷன் பேனலில் மொபைல் டேட்டா சென்று ஆன் செய்ய வேண்டும்.
✆ இனி மொபைல் போனின் நெட்வொர்க் செட்டிங்ஸ் சென்று பிரைமரி சிம் கார்டின் அனைத்து செட்டிங்ஸ்களும் சரியாக இருக்கின்றதா எனச் சரி பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் மொபைல் டேட்டா பயன்படுத்த பிரைமரி சிம் தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள்.
✆ பின் மொபைல் போனில் எல்டிஇ நெட்வொர்க் தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். இதைச் செயல்படுத்த செட்டிங்ஸ் - மொபைல் நெட்வொர்க்ஸ் - பிரெஃபர்டு நெட்வர்க் டைப் ஆப்ஷன் தேர்வு செய்ய வேண்டும்.
✆ தேவையென்றால் ஏபிஎன் மூலம் இண்டர்நெட் செட்டப் செய்ய வேண்டும். இதற்கு உங்களது கருவியில் ஜியோ சிம் சிக்னல் இருக்க வேண்டும். இதைச் செயல்படுத்த செட்டிங்ஸ் - மொபைல் நெட்வர்க்ஸ் - அக்செஸ் பாயின்ட் நேம்ஸ் செல்ல வேண்டும்.
✆ இனி நெட்வொர்க் ஆப்பரேட்டர் ஆப்ஷன்களை மேனுவலாக தேர்வு செய்ய வேண்டும். இதற்கு செட்டிங்ஸ் - மொபைல் நெட்வொர்க்ஸ் - நெட்வொர்க் ஆப்பரேட்டர் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
✆ இனியும் ஜியோ சிம் வேலை செய்யவில்லை எனில் உங்களது மொபைல் போனின் மென்பொருள் அல்லது வன்பொருள் கோளாறு ஏற்பட்டிருக்கலாம். ஒரு வேலை சிம் கார்டு வேலை செய்து அழைப்புகளை மேற்கொள்ள முடியவில்லை என்றால் இதனை முயற்சிக்கலாம்.
✆ கூகுள் பிளே ஸ்டோர் சென்று ஜியோ ஜாயின் ஆப் டவுன்லோடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் பெரும்பாலும் ஜியோ சிம் வேலை செய்யும். எனினும் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்ட கருவிகளில் ஜியோ வேலை செய்யாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment