உலகின் மகிழ்ச்சியான நாடாக நார்வே தேர்வாகியுள்ளது. மார்ச் 20-ம் தேதியான இன்று உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது .
கடந்த 2016ம் ஆண்டு டென்மார்க் முதலிடத்தில் இருந்தது. இந்த ஆண்டு நார்வே முதலிடத்தை பெற்றுள்ளது.
'உலகின் மிகவும மகிழ்ச்சியான நாடுகள் 2017' பட்டியலில் நார்டிக் நாடுகளான நார்வே, டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து. ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளே முன்னணி இடத்தை பிடித்துள்ளன.
ஐ.நா.வின் ‘சஸ்டெய்னபிள் டெவலப்மென்ட் சொலூஷன்ஸ் நெட்வொர்க்’ அமைப்பு மகிழ்ச்சிகரமான உலக நாடுகள் பட்டியலை கடந்த 2012ம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. 2017ம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதற்காக 155 நாடுகளில் ஆய்வு செய்துள்ளது. அதன்படி ஒரு நாட்டின் தனிநபர் வருமானம், ஆரோக்கியம், ஆயுட்காலம், சமூக ஆதரவு, சுதந்திரம் போன்ற மகிழ்ச்சிக்கான விஷயங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதில் சஹாரா பாலைவனத்தை ஒட்டிய ஆப்ரிக்க நாடுகள், சிரியா மற்றும் யேமன் உள்ளிட்ட குறைவான மகிழ்ச்சியுடைய நாடுகளாக பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
உலகின் மகிழ்ச்சியான 10 நாடுகள் பின்வருமாறு:
நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, பின்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து. ஆஸ்திரேலியா மற்றும் ஸ்வீடன் ஆகியவை ஆகும்.
தெற்கு சூடான், லைபீரியா, கொய்னா, டோகோ, ருவாண்டா, தான்சானியா, ப்ருண்டி மற்றும் மத்திய ஆப்பிரக்கன் குடியரசு உள்ளிட்டவை கடைசி 8 இடங்களில் உள்ள நாடுகளாகும்.
ஜெர்மனி 16வது இடத்திலும், பிரிட்டன் 19 வது இடத்திலும், பிரான்ஸ் 31வது இடத்திலும், அமெரிக்கா 14வது இடத்திலும் உள்ளது.
மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கி 122வது இடத்தில் உள்ளது. ஆனால் இலங்கை(120), வங்கதேசம்(110), எத்தியோப்பியா (119), மியான்மர் (114), ஈராக் (117), ஈரான் ( 108), சோமாலியா(93) பாகிஸ்தான்(80) சீனா(79) ஆகியவை முன்னேறிய இடத்தில் உள்ளன.
பாரபட்சம் அதிகம் இல்லாத இல்லாத நாடுகளில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். அங்கு சமத்துவம் அதிகமாக உள்ளதுதான் அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம் என்று ஐநா கூறியுள்ளது. அதேபோல. பாரபட்சம் உள்ள சமுதாயத்தில் மக்கள் மகிழ்ச்சியாக வாழவில்லை என்றும் தனது குறிப்பில் ஐநா குறிப்பிட்டுள்ளது.!
No comments:
Post a Comment